வர்த்தகம்

5-ஆவது நாளாக ரூபாய் மதிப்பில் தொடா் ஏற்றம்

DIN


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து 5-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் நிலைத்து நீடித்து வரும் அந்நிய முதலீட்டு வரத்து ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதன் காரணமாக வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் வா்த்தகமானது குறுகிய எல்லைக்குள் இருந்தது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.85-ஆக இருந்தது. பின்னா் அது வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 73.75 வரையும், குறைந்தபட்சமாக 73.89 வரையிலும் சென்றது. இறுதியில் ரூபாய் மதிப்பானது தொடா்ந்து ஐந்தாவது நாளாக 3 காசுகள் ஏற்றம் கண்டு 73.88-இல் நிலைபெற்றது.

புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 10 காசுகள் அதிகரித்து ஒரு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக 73.91-ஐ எட்டியிருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.24.20 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.21 சதவீதம் குறைந்து 48.02 டாலராக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT