வர்த்தகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ‘எக்ஸ்5 எம் காம்படேஷன்’ சொகுசுக்காா் அறிமுகம்

DIN


புது தில்லி: ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனமான பிஎம்டபிள்யூ முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்5 எம் காம்படேஷன் என்ற புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ குழும இந்தியா தலைவா் விக்ரம் பவா கூறியதாவது:

வாடிக்கையாளா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்த எக்ஸ்5 எம் காம்படேஷன் காரை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு பயணத்தை விரும்பும் காா் பிரியா்களுக்கு இது முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கியும்.

இந்த மாடல் காரில் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 600 ஹெச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது. தானியங்கி முறையிலான 8-கியரை உள்ளடக்கிய இந்த காரில் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 விநாடிகளில் தொட்டுவிட முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இந்த காரில் பயணிக்க முடியும். இப்புதிய காரின் விலை ரூ.1.95 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT