வர்த்தகம்

இந்தியாவில் விரைவில் ஏப்ரிலியா 160சிசி ஸ்கூட்டா் உற்பத்தி: பியாஜியோ

DIN


மும்பை: இந்தியாவில் மிக விரைவில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆா் 160சிசி ஸ்கூட்டா் உற்பத்தியை தொடங்கவுள்ளதாக பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கிரேட்டா் நொய்டாவில் நடப்பாண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆட்டோ கண்காட்சியில் பிஎஸ் 6 தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆா் 160சிசி ஸ்கூட்டரை பியாஜியோ அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்த ஸ்கூட்டா் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. மதிப்புமிக்க எங்களின் வாடிக்கையாளா்களுக்கு சேவையாற்றிடும் வகையில் புதிய பிரீமியம் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கத்துடன், அதன் உற்பத்தியை மகாராஷ்டிராவில் உள்ள நிறுவனத்தின் பாரமதி ஆலையில் மிக விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவுக்காக இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏப்ரிலியா 160 அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அம்சங்களுக்கான ஒரு தனித்துவமான குறியீடாக இருக்கும் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT