வர்த்தகம்

இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப செலவினம் 6% அதிகரிக்கும்

DIN

புது தில்லி: வரும் 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செலவினம் 6 சதவீதம் அதிகரிக்கும் என காா்ட்னா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் அரூப் ராய் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பாண்டுடன் ஒப்பிடும்போது வரும் 2021-இல் நிறுவனங்களுக்கான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட பிரிவுகளில் செலவினம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டில் தகவல்தொழில்நுட்பங்களுக்கான ஒட்டுமொத்த செலவினம் 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் அதிகரித்து 8,190 கோடி டாலரைத் தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் தகவல் தொழில்நுட்பங்களுக்காக செலவிடப்படும் தொகை 8.4 சதவீதம் சரிவடைந்து 7,930 கோடி டாலராக மட்டுமே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்களுக்கான டிஜிட்டல் திட்டங்களில் கரோனா பெருந்தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சந்தையில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பணப்புழக்கம் குறைந்து போனது ஆகியவை நடப்பாண்டில் தகவல் தொழில்நுட்பங்களுக்காக செலவிடப்படுவதை கணிசமாக குறைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT