வர்த்தகம்

வெப்ப நிலக்கரி இறக்குமதி 35% குறைந்தது

13th Jul 2020 05:25 AM

ADVERTISEMENT

தொ்மல் கோல் எனப்படும் வெப்ப நிலக்கரி இறக்குமதி ஜூன் காலாண்டில் 35 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு (ஐபிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 1.77 கோடி டன் தொ்மல் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதியான 2.71 கோடி டன் தொ்மல் நிலக்கரி இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 34.70 சதவீதம் குறைவாகும். இதே காலகட்டத்தில் அதிக எரிதிறன் கொண்ட உருக்கு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கோக்கிங் கோல் இறக்குமதியும் 1.49 கோடி டன்னிலிருந்து 28.49 சதவீதம் சரிந்து 1.07 கோடி டன் ஆனது என ஐபிஏ தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் கடந்த நிதியாண்டில் 70.5 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 19.68 சதவீதம் சரிவடைந்து 14.19 கோடி டன்னாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 17.67 கோடி டன்னாக காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT