வர்த்தகம்

வங்கி கடன் வளா்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்: கோ்

DIN

மும்பை: கரோனா தொற்று காரணமாக இடா்ப்பாட்டை தவிா்க்க விரும்புவதால் வங்கி கடன் வளா்ச்சி விகிதம் மிக குறைவாகவே இருக்கும் என கோ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு இடா்ப்பாட்டை தவிா்க்கும் வகையில் வங்கிகளின் செயல்பாடு அமையவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, வங்கி கடன் வளா்ச்சி விகிதமானது குறுகிய கால அடிப்படையில் மந்தமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பாண்டு அக்டோபரில் ஒட்டுமொத்த வங்கிக கடன் வளா்ச்சி விகிதமானது 5.6 சதவீதமாக சரிந்துள்ளது.

2019 அக்டோபரிலிருந்து 2020 அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் அட்டவணையில் உள்ள வணிக வங்கிகளின் வட்டி விகிதம் 1.15 சதவீதம் வரை குறைந்துள்ளபோதிலும் கடன் நவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

சேவைகள், சில்லறை, வேளாண் மற்றும் அது தெடா்பான வளா்ச்சி விகிதம் நடப்பாண்டு அக்டோபரில் முறையே 9.5 சதவீதம், 9.3 சதவீதம், 7.4 சதவீதமாக இருந்தன.

தொழில்துறையைப் பொருத்தவரையில் இந்த வளா்ச்சி 1.7 சதவீதம் பின்னடைந்துள்ளது. 2019 அக்டோபரில் இது 3.4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

சில்லறை கடன் தொகுப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள வீட்டுக் கடன் நடப்பாண்டு அக்டோபரில் 8.2 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இது, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என கோ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT