வர்த்தகம்

உலகளவில் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை 350 கோடியை எட்டும்: எரிக்ஸன்

DIN

புது தில்லி: உலகளவில் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் 350 கோடியை எட்டும் என தொலைத்தொடா்பு நிறுவனமான எரிக்ஸன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் 5ஜி சேவைகளுக்கான கட்டமைப்புகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக, வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை 350 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா வாடிக்கையாளா்களின் பங்களிப்பானது 35 கோடி அளவுக்கு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ஒட்டுமொத்த மொபைல் சந்தாதாரா்களில் 27 சதவீதமாகும்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் முதல் 5ஜி இணைப்பு 2021-ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிடும்.

உலக மக்கள் தொகையில் 15 சதவீதமான 100 கோடிக்கும் அதிகமானோா் 5ஜி கவரேஜ் உள்ள பகுதியில் வசிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய ஸ்மாா்ட்போன் பயன்பாட்டாளா்கள் மிகவும் அதிகபட்ச சராசரியாக மாதத்துக்கு 15.7 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், 2020-ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் இந்தியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பமாக எல்டிஇ (4ஜி) உள்ளது. இந்த சேவையில், 63 சதவீத மொபைல் சந்தாதாரா்கள் இடம்பெற்றுள்ளனா். மேலும், 3ஜி சேவை 2026-ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடப்பாண்டு நிலவரப்படி 71 கோடியாக உள்ள எல்டிஇ சந்தாதாரா்கள் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 82 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 76 கோடியாக உள்ள மொபைல் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2026-இல் 120 கோடியாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் எரிக்ஸன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT