ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? சுக்கிர தசை சிறப்பாக அமையுமா? அரசு வேலை கிடைக்குமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

DIN

என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? சுக்கிர தசை சிறப்பாக அமையுமா? அரசு வேலை கிடைக்குமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

- வாசகி, வாலாஜாபாத்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில், களத்திர நட்பு ஸ்தானாதிபதி,அயன ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானுடனும், அஷ்டம லாபாதிபதியான குரு பகவானுடனும் இணைந்திருக்கிறார். 
பாக்கிய ஸ்தானத்தில் லக்னாதிபதி இருப்பதும் மற்றும் குரு மங்கள யோகம் உண்டாகியுள்ளதும் சிறப்பு.குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும் படிகிறது. 
பூர்வ புண்ணியாதிபதி புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்ம கர்மாதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் முயற்சி ஸ்தானாதிபதியான சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். சனி பகவான் நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். 
சுக்கிர பகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இது சிறப்பான தசையாகும். தனியார் துறையில் நல்ல வருமானம் வரும் வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். மூன்றாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT