ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு இதுவரை மூன்று முறை துஷ்ட சக்திகளின் ஆவி பீடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடருமா... ஆம் எனில் அதற்குரிய பரிகாரம் என்ன... டாக்டர் அல்லது உளவியல் படிப்பில் எது ஏற்றது... அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்...  -வாசகர், புதுக்கோட்டை.

DIN

உளவியல் படிப்பு ஏற்றது
 என் மகளுக்கு இதுவரை மூன்று முறை துஷ்ட சக்திகளின் ஆவி பீடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடருமா... ஆம் எனில் அதற்குரிய பரிகாரம் என்ன... டாக்டர் அல்லது உளவியல் படிப்பில் எது ஏற்றது... அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்...
 -வாசகர், புதுக்கோட்டை.
 உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானாதிபதி சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.
 ஐந்து, எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவான் குரு, செவ்வாய் பகவான்களுடனும் இணைந்திருக்கிறார். குரு மங்கள யோகம், சிவ ராஜயோகம், நீச்ச பங்க ராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன.
 குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது. அவருக்கு மன நோய் ஏற்பட்டு இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. பித்ரு தோஷமும் சற்று உள்ளதால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
 மற்றபடி ஆவி பீடித்திருந்தது என்று கூறமுடியாது. அவரது ஜாதகம் வலுவாக உள்ளது. தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சுய புக்தி 40 மாதங்கள் முடிந்து சூரிய புக்தி நடப்பதால் அவருக்கு உளவியல் படிப்பு ஏற்றதாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT