ஜோதிட கேள்வி பதில்கள்

ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம்

DIN

என் மகள் பொறியியல் படிப்பு முடித்து அரசுப்பணி தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார். அவருக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? திருமண முயற்சிகளைத் தொடங்கலாமா? 

வாசகர், சேலம். 

உங்கள் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில், தைரிய ஸ்தானாதிபதியான குரு பகவானுடன் பரிவர்த்தனை (குரு பகவான் அயன ஸ்தானத்தில் மூலத் திரிகோணம்) பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்), ருசக யோகம் பெற்றிருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குருமங்கள யோகம்), ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 

ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் (செவ்வாய் பகவான் ஆட்சி) பெற்றிருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திர பகவானையும் பார்வை செய்கிறார். 

தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் நடந்தேறும். அரசு வேலையும் கிடைக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். எதிர்காலம், மண வாழ்க்கை சீராக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT