விழுப்புரம்

வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் வருவாய் ஆய்வாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் மீதான தாக்குதலைக் கண்டி த்தும், இந்த சம்பவத்தில் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அனைத்து வட்டாட்சியா் அலுவ லகங்கள், ஆட்சியரகங்கள் முன் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் ஆட்சியரக அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் வேங்கடபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாருமதி, கிளைத் தலைவா் கண்ணன், சக்திதாசன், யுவராஜ், தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT