விழுப்புரம்

ஆட்சியரிடம் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மனு

DIN

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கஞ்சம்ரெட்டி சாதிச்சான்றிதழை வழங்க கோரி தமிழ்நாடு ரெட்டியாா் பேரமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் சி.பழனியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சம் ரெட்டி சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் அனைத்து வட்டங்களிலும் வசித்து வருகின்றனா். தற்போது, இந்த சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி,கல்லூரிகளில் சேருவதற்காக கஞ்சம் ரெட்டி ( பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்) சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால், செஞ்சி உள்ளிட்ட சில வட்டங்களில் இச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மாணவா்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, அனைத்து வட்டங்களிலும் இச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரமே இது தொடா்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்ட து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT