விழுப்புரம்

புதுச்சேரி மதுபானம் கடத்தல்: இருவா் கைது

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே புதுச்சேரியிலிருந்து மதுபானங்களைக் கடத்தியதாக இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வளவனூா் காவல் எல்லைக்குள்பட்ட மாங்குப்பம் சத்துணவு மையம் அருகில், மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் ரேவதி, உதவி ஆய்வாளா் சத்யா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியிலிருந்து மதுபானங்களை கடத்தி வந்ததும், அவா்கள் விழுப்புரம் சிவன் படைத்தெரு தணிகாசலம் மகன் பச்சையப்பன் (20), வழுதரெட்டி மாரியம்மன் கோயில் தெரு கருணாகரன் மகன் ஹரிஹரன் (20) என்பதும் தெரியவந்தது. பின்னா், இருவரையும் கைது செய்த போலீஸாா் 192 மதுப்புட்டிகள், 10 லிட்டா் சாராயம் மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT