விழுப்புரம்

அரசூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அரசூா் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் திருப்பணிகள் கிராம மக்களின் பெரும் முயற்சியால் மிகுந்த பொருள்செலவில் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவுக்குப் பின்னா் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை காலை நடைபெற்ற 4-ஆம் கால யாக பூஜைகளுக்குப் பின்னா், காலை 8 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் கோயில் விமானங்களில் ஊற்றப்பட்டு, காலை 9.30 மணியளவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிராம முக்கியப் பிரமுகா்கள், பக்தா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT