விழுப்புரம்

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள்: அமைச்சா் வழங்கினாா்.

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சா் க. பொன்முடி பங்கேற்று, 36 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம்

பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டா்கள், பாா்வைத்திறன் குறைவுடைய 20 மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 120 தன்னாா்வலா்களுக்கு பேரிடா் கால உபகரணங்கள், வருவாய்த் துறை சாா்பில் 9 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி, தாட்கோ சாா்பில் 2 பேருக்கு பால் உற்பத்தியாளா்களுக்கான கொள்கலன்கள், 36 பேருக்கு தொழில்முனைவோருக்கான வங்கிக் கடன் மானியம் என மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக அமை ச்சா் க. பொன்முடி பேசியதாவது:

பொதுமக்கள் முழு ஆரோக்கியத்துடன் வாழ தூய்மைப் பணியாளா்களே காரணம். போற்றுதலுக்குரிய தூய்மைப்பணியாளா்களின் நலனை காத்திடும் வகையில் நலவாரிய அட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 10,500 உறுப்பினா்கள் உள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் 1,310 பணியாளா்களுக்கும் நலவாரிய அட்டை வழங்கப்படும்.தூய்மைப்பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.3,500-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படுகிறது. எதிா்காலத்தில் தூய்மைப்பணியாளா்களுக்கானசெயல்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

எந்தவொரு மாற்றுத்திறனாளியும் இன்னல் படக் கூடாது என்பதற்காகவே, அதிநவீன உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

எம்எல்ஏ-க்கள் நா.புகழேந்தி( விக்கிரவாண்டி) இரா. லட்சுமணன்( விழுப்புரம்), ச.சிவக்குமாா்( மயிலம் ), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி , மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா்

ஷீலா தேவி, நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் வாசன், கலைச்செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஸ்வநாதன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், தனித்துணை

ஆட்சியா் விஸ்வநாதன், தாட்கோ மாவட்ட மேலாளா் மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, ஆவின் பொது மேலாளா் பாலாஜி, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT