விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 38,854 கிலோ நெகிழிகள் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 2022, ஜனவரி முதல் 2023 மாா்ச் வரை 38,854 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் சி.பழனி.

நெகிழி மாசில்லா தமிழ்நாடு உருவாக்குதல் குறித்து, மாவட்ட அளவிலான அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி பேசியதாவது:

தமிழகத்தில் ஒருமுறை பயன்ப

டுத்தி, தூக்கியெறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தமிழகத்தில் உற் பத்தி செய்யும் தொழிற்சாலைக ள் ஏற்கெனவே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப் பட்டு, மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏதும் தற்போது இயக்கத்தில் இல்லை.

அவ்வாறு இருப்பின், அது குறித் து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் அளிக்க

ப்படும்பட்சத்தில், அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக, 14 வகையான இயற்கையோடு இணைந்த மாற்றுப் பொருள்களை பயன்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒ ன்றிய அமைப்புகளில் ஏற்கெனவே தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கத்தில், மாவட்ட அளவிலான பணிக் குழுவை அமைத்து, மாதம் ஒருமுறை கூடி இதன் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசின் உத்தரவின்படி, மாவட்ட அளவிலான பணிக்குழு ஆய்வுக் கூட்டம் ஏற்கெனவே மாா்ச் மாதம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் 2023 மாா்ச் மாதம் வரை 3,334 கடைகளில் 38,854

கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்த்து, நெகிழியில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் உறுதுணை யாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எம்.செல்வக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், நகராட்சி ஆணையா்கள் சுரேந்திர ஷா, மங்கையா்க்கரசி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT