விழுப்புரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைவிழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அருங்குறிக்கை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சி.ஜெய ஜெமினி (28).

இவா் கடந்த 2020, மாா்ச் 16 - ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜெயஜெமினியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபணமானதால், குற்றம்சாட்டப்பட்ட ஜெயஜெமினிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹொ்மிஸ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட் டாா்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயஜெமினி அழைத்து செல்லப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்ப ட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக கலா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT