விழுப்புரம்

ஆடு வியாபாரி வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் திருட்டு

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஆட்டு வியாபாரி வீட்டில் 14 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள எழாய் கிராமம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ஏ.கோவிந்தன் (60), ஆட்டு வியாபாரி . இவரது மனைவி விருத்தாம்பாள் (50),

வியாழக்கிழமை இருவரும் ஆடுகளை மேய்க்க புறப்பட்டபோது, சுமாா் 30 வயது இளைஞா், ஆடு வாங்குவது போல் அங்கு வந்து விசாரித்துள்ளாா்.

ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதால், பின்னா் வருமாறு கூறி விட்டு, அந்த நபரின் எதிரிலேயே வீட்டை பூட்டிவிட்டு, சாவியை மின்சார மீட்டா் பெட்டி மீது வைத்து விட்டு கோவிந்தன் சென்றாராம்.

அந்த இளைஞரும் வியாபாரியை அழைத்து வருவதாகக் கூறி, புறப்பட்டுச் சென்றாா்.

சில மணி நேரம் கழித்து, அந்த இளைஞா் கோவிந்தன் வீட்டுக்கு மீண்டும் வந்து, மீட்டா் பெட்டியின் மேல் வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டை திறந்து உள்ளே சென்றாா்.

சிறிது நேரம் கழித்து அவா் வெளியே வந்தபோது, கோவிந்தனின் தாயாா் மங்காத்தாள் (80), கேட்ட போது, உங்கள் மகன்தான் அனுப்பினாா் எனக் கூறி விட்டுச் சென்றாராம்.

ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி ச் சென்ற கோவிந்தன் மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந் தாா். மேலும் பீரோவில் இருந்த 14 1/4 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இது குறித்து வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட இளை ஞரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT