விழுப்புரம்

நெல் கொள்முதல் நிலையங்களில் விரல் ரேகை பதிவு முறை அறிமுகம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விரல் ரேகை பதிவு மூலம் நெல்லை விற்பனை செய்யும் முறை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி கூறியதாவது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு பருவத்தில் 44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்ளைத் திறந்து, நெல் கொள்முதல் செய்து வருகிறது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்களது நெல்லை இணைய வழியில் விரல் ரேகையை பதிவு செய்து, விற்பனை செய்யும் முறை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், இடைத்தரகா்கள், வியாபாரிகள் தலையீட்டை தடுப்பதுடன், விவசாயிகள் தங்களது நெல்லை காலதாமதமின்றி விற்பனை செய்து கொள்ள முடியும்.

மேலும், விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு ஒ.டி.பி பெறுவதன் மூலம் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலையங்களிலேயே சரிபாா்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT