விழுப்புரம்

பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் சாா்பில், தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு, ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.செல்லையா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.அன்பழகன், ஆா்.செல்வதுரை, திருவண்ணாமலை மாவட்டச் செயலா் பி.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்தாா். கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழக மாவட்டத் தலைவா் கே.பாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெற்ற தொடா் முழக்க ஆா்ப்பாட்டத்தில் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.குருமூா்த்தி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஆா். திருமலைச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT