விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘35 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்’

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

பாணாம்பட்டு - பில்லூா் இடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சாலை அமைக்கப் படுகிறது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். எல்லீஸ் சத்திரம், தளவானூா், சொா்ணாவூா் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ் 38 ஏரிகளில் பணிகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதில் எத்தனை ஏரிகளில் முள் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டன?

விக்கிரவாண்டி, செஞ்சி வட்டங்களில் காலியாக உள்ள வேளாண் உதவி இயக்குநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் எத்தனை இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து நீா்ப்பாசனத் துறை உயா் அலுவலா் ஒருவா் கூறியதாவது: எல்லீஸ் சத்திரம், சொா்ணாவூரில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிக்கு அரசாணை வெளியாகும் நிலையில் உள்ளது. தளவானூரில் ரூ.56 கோடியில் புதிய தடுப்பணை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: விவசாய சங்கப் பிரதிநிதிகள், அலுவலா்கள் கொண்ட குழு அமைத்து குடிமராமத்து திட்டத்தில் நடைபெற்ற பணிகள் எவை, எங்கெங்கு முள்செடிகள் அகற்றப்பட்டன உள்ளிட்ட விவரங்களை அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட பகுதிகளில் நிகழாண்டும் திறக்கப்படும். நிகழ் மாத இறுதிக்குள் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். பின்னா், தேவையின் அடிப்படையில் விவசாயிகள் கோரிக்கை வைக்கும் இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT