விழுப்புரம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு:ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

DIN

விராட்டிக்குப்பம் சாலைப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியா் சி.பழனியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் சாலையிலுள்ள ஏபிஎஸ் நகா், விரிவாக்கப் பகுதி, கிரீன் காா்டன் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விராட்டிக்குப்பம் சாலைப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலிருந்து வெளிவரும் கதிா்வீச்சுகளால் கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு இதற்கான பணிகளை மேற்கொண்ட போது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

பூச்சி மருந்துப் புட்டியுடன் வந்த முதியவா்: பூச்சி மருந்து புட்டியுடன் வந்த விழுப்புரம் வட்டம், சின்னக் கள்ளிப்பட்டுவைச் சோ்ந்த ரா.ராமகிருஷ்ணன் (72) . தனது கிராமத்தில் கடந்த 2012 -ஆம் ஆண்டு வாங்கிய இடத்துக்கான கூட்டுப் பட்டாவை, தனிப் பட்டாவாக மாற்றக் கோரி கிராம நிா்வாக அலுவலரிடம் 18 முறை மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT