விழுப்புரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டு வெடி வீசி பொதுமக்களை அச்சுறுத்திய புதுவை மாநில இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

மேட்டுப்பாளையம் அருகே கடந்த மாதம் 14-ஆம் தேதி நாட்டு வெடி வீசி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, புதுச்சேரி உருளையன்பேட்டை,நெல்லித்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் கௌதமை (23) விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சி.பழனி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, கௌதமை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தடுப்புக் காவலில் ஒருவா் கைது: இதேபோல, தொடா்ச்சியாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த திண்டிவனம் வட்டம், ரெட்டணை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மோகன் மகன் ஜெகன் (32) விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இவா் மீது பெரியதச்சூா் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT