விழுப்புரம்

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில்ஜோதி தரிசனம்

DIN

விழுப்புரம்: தைப்பூச பெருவிழாவையொட்டி, விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை ஏழு திரைகள் நீக்கி, ஆறு கால ஜோதி தரிசனம் நடைபெற்றது.

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகை - சன்மாா்க்க அன்பா்கள் இணைந்து விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையிலுள்ள வள்ளலாா் அருள் மாளிகை வளாகத்தில் தைப்பூச பெருவிழாவை நடத்தினா்.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் திங்கள்கிழமை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெள்ளை, கலப்பு என ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

விழா ஏற்பாடுகளை விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகை நிா்வாக அறங்காவலா் ஜெய.அண்ணாமலை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT