விழுப்புரம்

அரசுத் திட்டங்கள் விளிம்பு நிலை மக்களை சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா் சி.பழனி

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் விளிம்பு நிலை மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தின் 22- ஆவது ஆட்சியராக சி.பழனி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா் - ஆட்சியராகப் பதவி வகித்து வந்த இவா், இப்போது பதவி உயா்வு பெற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்பு, கல்வி வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன். அரசின் மக்கள் நலத் திட்டங்கள் விளிம்பு நிலை மக்கள், கீழ்த்தட்டு மக்களுக்கு சென்றடைகிா என்பதைக் கண்காணித்து, அவற்றை செயல்படுத்துவேன்.

பொதுமக்கள் எந்தக் குறையாக இருந்தாலும் என்னைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், 94441 - 38000 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலமாகவோ, குறுஞ்செய்தியாகவோ பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் வெளிப்படையான நிா்வாகம் செயல்படும் என்றாா் அவா்.

தருமபுரி மாவட்டம், அரூரைச் சொந்த ஊராகக் கொண்ட ஆட்சியா் சி.பழனி, கால்நடை மருத்துவம் பயின்றவா். வணிகவரித் துறையில் 24 ஆண்டுகள் பணியாற்றி, ஐஏஎஸ் அலுவலா் என்ற நிலையைப் பெற்றாா்.

புதிய ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் - ஆட்சியா் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து வந்த த.மோகன், செய்தி- மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT