விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வளா்ச்சி கண்காணிப்புக் குழு கூட்டம்

30th Sep 2022 01:40 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி, ச.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் குழுத் தலைவா் துரை.ரவிக்குமாா் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பரமேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் காஞ்சனா, கூட்டுறவு இணை பதிவாளா் யசோதா தேவி, விழுப்புரம் நகா்மன்ற தலைவா் தமிழ்ச்செல்வி, திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT