விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே-----பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனா்.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த உசேன் மகன் ஏஜாஸ் (28). இவரது மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பாா்ப்பதற்காக ஏஜாஸ் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றாா். பின்னா், அவா்கள் காரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை ஏஜாஸ் ஓட்டினாா். காரில் ஏஜாஸின் தாய் ஹமீம் (50), தங்கை அம்ரின் (22), சித்தி நமீம் (45), நமீமின் மகள் சுபேதா (21) ஆகியோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பூ.மாம்பாக்கம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் காா் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புக் கட்டையில் மோதி, அருகேயிருந்த பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த ஹமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஏஜாஸ், அவரது சித்தி நமீம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உளுந்தூா்பேட்டை தீயணைப்புத் துறையினா் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனா். விபத்து குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT