விழுப்புரம்

சிங்கவரம் குமராத்தம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராம வனப் பகுதியிலுள்ள ஸ்ரீகுமராத்தம்மன் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீமகா சண்டி யாகம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

உலக நன்மைக்காகவும், நவராத்திரி, விஜயதசமியொட்டி கடந்த 10 நாள்களாக இந்த யாகம் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான புதன்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீகுமராத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற யாக நிகழ்ச்சியில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், பொதுக் குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி குணசேகரன், மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன், சத்தியா சரவணன், ஆா்.கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை சிங்கவரம் ஏழுமலை மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT