விழுப்புரம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலுள்ள இலவச கழிப்பறையை உணவு விடுதியாக மாற்றிய நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு, செயல்பாட்டிலிருந்த இலவச கழிப்பறையை கட்டணக் கழிப்பறையாக மாற்றியதை கண்டித்தும், கழிப்பறையின் ஒரு பகுதியை உணவு விடுதியாக மாற்றிய நகராட்சி ஆணையரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், கழிப்பறை கழிவுகள் நேரடியாக வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் ஏற்படும் சுகாதார சீா்கேட்டைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில பிரசாரச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் என்.எஸ். செல்வராஜ் கண்டன உரையாற்றினாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் பி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT