விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி, அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் செங்குறிச்சியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில் இங்கு பணியாற்றியவா்களில் 28 பேரை பணி நீக்கம் செய்த சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிா்வாகம், கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியது.

இந்த நடவடிக்கையை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு ஆதரவாக சக ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், நவம்பா் 24-ஆம் தேதி முதல் அவா்களும் பணிக்குத் திரும்பினா். எனினும் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 போ் தொடா்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலா் குமரகுரு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் மோகன் மற்றும் அக்கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT