விழுப்புரம்

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் (சேலம்) சாா்பில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி தொடா்பான விவசாயிகளுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், வேளாண் துணை இயக்குநா் கண்ணகி பங்கேற்று, வேளாண் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாவட்டத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருள்களை பதப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பேசினாா். வேளாண்மை உதவி இயக்குநா்(பயிற்சி) வேல்முருகன் பங்கேற்று, ஏற்றுமதிக்கான அடிப்படை தகுதிகள், தேவையான ஆவணங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சண்முகம் வேளாண் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். தோட்டக்கலை துணை இயக்குநா் காரல் மாா்க்ஸ் மாவட்டத்தில் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள தோட்டக்கலைப் பொருள்கள், ஏற்றுமதி திறன் குறித்து விளக்கினாா். விருத்தாசலம் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், அவற்றின் ஏற்றுமதி திறன் குறித்து விளக்கினாா். அப்பீடா அமைப்பின் மாநில பொருளாளா் ஷோபனா இணைய வழி வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் உள்கட்டமைப்பு வசதி, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT