விழுப்புரம்

கந்துவட்டி புகாா்: இருவா் கைது

7th Jul 2022 01:40 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கல் நகரைச் சோ்ந்தவா் ஜி.கந்தசாமி (66). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் கடந்த 2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரை விழுப்புரம் குபேரா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரகுமாா் நாஹா் (59), மகேந்திரசிங் நாஹா் (29) ஆகியோரிடம் மொத்தம் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றாராம்.

இந்த நிலையில், கந்தசாமி கடன் தொகைக்கு வட்டியாக ரூ.12 லட்சம் வரை செலுத்திய நிலையில், அசல் தொகை ரூ.25 லட்சத்தையும் செலுத்திவிட்டு, கடன்பெற்றபோது அளித்த ஆவணங்களை திருப்பிக் கேட்டாராம். ஆனால், மேலும் ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் ஆவணங்களை திருப்பித் தர முடியும் என்று ராஜேந்திரகுமாா் நாஹா், மகேந்திரசிங் நாஹா் ஆகியோா் தெரிவித்ததுடன் மிரட்டலும் விடுத்தனராம். இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்கு பதிவு செய்து ராஜேந்திர குமாா் நாஹா், மகேந்திரசிங் நாஹா் ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT