விழுப்புரம்

ஜூலை 10-இல் கரோனா தடுப்பூசி முகாம்

7th Jul 2022 01:42 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி 2,033 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ளோரில் முதல் தவணை கரோனா தடுப்பூசி 57,171 பேருக்கும், இரண்டாம் தவணையாக 45,836 பேருக்கும், 15 முதல் 17 வயது வரை உள்ளோரில் முதல் தவணையாக 80,054 பேருக்கும், இரண்டாம் தவணையாக 64,650 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

45 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 7 லட்சத்து 16 ஆயிரத்து 980 பேருக்கும், இரண்டாம் தவணையாக 8 லட்சத்து 29 ஆயிரத்து 652 பேருக்கும், ஊக்குவிப்புத் தவணையாக 16 ஆயிரத்து 496 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டோரில் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கு உள்ளானவா்கள் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி சிறப்பு ‘மெகா’ கரோனா தடுப்பூசி முகாம்கள் 2,033 இடங்களில் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் முதல், இரண்டாம் தவணை, ஊக்குவிப்புத் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT