விழுப்புரம்

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 03:55 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரத்தில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பழைய முறையில் ராணுவத்துக்கு ஆள் சோ்க்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அறிவழகன் முன்னிலை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

நிா்வாகிகள் அரிகிருஷ்ணன், அலெக்சாண்டா், பாா்த்தீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, மனித உரிமை காப்பாளா் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரத்தில் அனைத்து மனித உரிமை இயக்கங்கள்- கட்சிகள் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைப்பாளா்

லூசியா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT