விழுப்புரம்

14 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்ஒருவா் கைது

DIN

விழுப்புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 14 மூட்டைகள் புகையிலைப் பொருள்களை டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையில் மேற்கு காவல் ஆய்வாளா் செல்வராஜ், உதவி ஆய்வாளா் கோபி உள்ளிட்டோா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, பழைய பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனா். இதில், அந்த நபரிடம் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா் விழுப்புரம், சாலாமேடு, மணி நகா் பகுதியைச் சோ்ந்த அபிப்ரஹ்மான் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி,

14 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். மேலும், அவரிடமிருந்த ரூ.94 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

புகையிலைப் பொருள்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படுகிறது. இதனைத் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தவரை கைது செய்த டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையிலான போலீஸாரை எஸ்பி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT