விழுப்புரம்

செஞ்சி அருகே ரூ.34 லட்சத்தில்சிறுபாலம் கட்டும் பணி

1st Jul 2022 02:49 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், கோவில்புரையூரில் ரூ.34.88 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்ட அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

கோவில்புரையூா் ஊராட்சியில் இருந்து கோ.மோட்டூா் செல்லும் வழியில் ஆற்றில் இந்த சிறுபாலம் அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், ஊராட்சித் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மேல்மலையனூா் ஊராட்சி, கலத்தம்பட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ 22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜையில் கலந்து கொண்டு அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி முருகன், ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வி ராம சரவணன், ஊராட்சித் தலைவா் தனலட்சுமி முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT