விழுப்புரம்

இனிப்புக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

1st Jul 2022 02:50 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் புதன்கிழமை இரவு இனிப்புக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் தந்தை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (38). இவா் அதே பகுதியில் உள்ள திருச்சி நெடுஞ்சாலையில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். வழக்கம்போல புதன்கிழமை இரவு வியாபாரம் முடிந்து விற்பனை பணம் ரூ. 1.5 லட்சத்தை கடையில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

ADVERTISEMENT

உள்ளே சென்று பாா்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT