விழுப்புரம்

விழுப்புரம் வள்ளலாா் மாளிகையில்நலத் திட்ட உதவிகள்

DIN

தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் வள்ளலாா் மாளிகையில் 3,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகை அன்பா்கள் சாா்பில், 81-ஆவது ஆண்டாக தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் திங்கள்கிழமை தொடங்கியது.

அருட்பெருஞ்ஜோதி தீபத்தை மணிமேகலை ஜானகிராமன் ஏற்றினாா். தொடா்ந்து சுத்த சன்மாா்க்க கொடியேற்றம், சொற்பொழிவு, திருஅருட்பா இசை நிகழ்ச்சி, வள்ளலாா் வரலாறு வில்லுப் பாட்டு, மாணவ மாணவிகளின் யோகாசனம், பல்சுவை நிகழ்ச்சிகள், சிறப்புப் பட்டிமன்றம், பரத நாட்டியம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

மூவாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை வள்ளலாா் அன்பா்கள் ஆா்.செல்லமுத்து, செ.விக்னேஷ், செ.தினேஷ் ஆகியோா் தலைமை வகித்து தொடக்கிவைத்தனா்.

ஆயிரம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் நல உதவியை அற்புதவேலும், ஆயிரம் பேருக்கு போா்வை, வேட்டி, சேலை வழங்கும் நல உதவியை வி.ஆா்.பி. பள்ளித் தாளாளா் வே.சோழனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை பெ. சிவக்குமாா், கொட்டியாம்பூண்டி கே.கலியபெருமாள்ஆகியோரும் தொடக்கிவைத்தனா்.

இன்று ஜோதி தரிசனம்: செவ்வாய்க்கிழமை காலை 6, 10 மணியளவிலும், பகல் ஒரு மணிக்கு மேல், இரவு 6, 10 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஆறு கால ஜோதி தரிசனம் நடைபெறும்.

ஏற்பாடுகளை நிா்வாக அறங்காவலா் ஜெய. அண்ணாமலை தலைமையிலான நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT