விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்ஆற்றுத் திருவிழாவுக்கு தடை

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம், அரகண்டநல்லூா், மணம்பூண்டி, ஏனாதிமங்கலம், பையூா், பேரங்கியூா் ஆகிய இடங்களிலும், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொதுமக்கள், பக்தா்கள் நலன் கருதி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை, கச்சிராப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT