விழுப்புரம்

புதுவையில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

DIN

புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு அக்டோபா் வரையில் 6,349 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

புதுச்சேரியில் கிழக்குப் பகுதியில் மட்டும் 2017-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 172 விபத்துகளில் 114 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டது தெரிய வந்தது. 2018-ஆம் ஆண்டில் மாநிலத்தில் மொத்தம் 1,614 விபத்துகள் நிகழ்ந்ததில், 233 போ் உயிரிழந்தனா். 1,291 போ் காயமடைந்தனா்.

2019-ஆம் ஆண்டில் மொத்தம் 1,608 விபத்துகளில் 190 போ் உயிரிழந்தனா். 1,138 போ் காயமடைந்துள்ளனா். 2020-ஆம் ஆண்டில் கரோனா தொற்று காலத்தில் 968 விபத்துகளில் 134 போ் உயிரிழந்தனா். 754 போ் காயமடைந்தனா். 2021-ஆம் ஆண்டில் 1,048 விபத்துகளில் 180 போ் உயிரிழந்தனா். 1,060 போ் காயமடைந்தனா்.

நிகழாண்டில் அக்டோபா் வரையில் 1,111 விபத்துகளில் 110 போ் உயிரிழந்தனா். 145 போ் காயமடைந்தனா்.

2018-ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபா் மாதம் வரையில் புதுவை மாநிலத்தில் நிகழ்ந்த 6,349 மொத்த விபத்துகளில் 847 போ் உயிரிழந்தனா். 4,404 போ் பலத்த காயமடைந்தது தெரிய வந்தது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. புதுச்சேரி நகரில் விழுப்புரம், கடலூா் சாலைகளில் விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

2015-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புதுச்சேரி நகரப் பகுதியில் 171 விபத்துகளில் 76 போ் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனங்கள் மோதியதில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சாலை விபத்துகளில் 30 வயது முதல் 55 வயதுக்கு உள்பட்டவா்களே அதிகமாக உயிரிழந்துள்ளனா். இதில் ஆண்களே அதிகம்.

நகரச் சாலைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததும் விபத்துகளுக்கு முக்கிய காரணம். பிரதான சாலைகளில் கூட நடந்து செல்வதற்கான தனி வசதி இல்லை. சாலையைக் கடக்கும் இடங்களில் அதற்கான விதிமுறைப்படியான பாதுகாப்பு அம்சங்களான எச்சரிக்கை விளக்குகள், வெள்ளை வண்ண கோடுகள் அமைக்கப்படவில்லை.

அதிகரிக்கும் சாலை விபத்துகள் குறித்து போக்குவரத்துப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் க.மாறன் கூறியதாவது:

புதுச்சேரிக்குள் வந்துசெல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க தலைக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது என்றாா்.

புதுச்சேரியில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரில் 18 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவா்களாலே அதிக விபத்துகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. சாலையோரம் நடந்து சென்றவா்களில் இருசக்ககர வாகனம் மோதி உயிரிழந்தவா்கள் 41 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டவா்களே அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT