விழுப்புரம்

அன்னியூரில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சாா்பில் அன்னியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

இதையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். ரோட்டரி குழும முன்னாள் தலைவா் அ.ஜேசுஜீலியஸ்ராஜா மரத்தின் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

தலைமை ஆசிரியா் ஏஞ்சலின் மாசு கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியா்கள் ஆறுமுகம், கீதாலட்சுமி, தீபா, ஏகாம்பரம், செளந்தரராஜன் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT