விழுப்புரம்

பாமகவினா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு

19th Aug 2022 03:38 AM

ADVERTISEMENT

விழுப்புரம், ஆக.18: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே அண்மையில் நடைபெற்ற கொலை வழக்கில் பாமக நிா்வாகி பெயா் தவறுதலாக சோ்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது பெயரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அந்தக் கட்சியினா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலா் ஜெயராஜ் தலைமையில் அந்தக் கட்சியினா், கொலை வழக்கில் எதிரியாக சோ்க்கப்பட்டுள்ள பாமக நிா்வாகி ஏழுமலையின் உறவினா்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்து மனு ஒன்றை அளித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:

ஆரோவில் அருகே கோட்டக்கரை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சோ்ந்த பாமக மாவட்ட துணைச் செயலா் ஆ.ஏழுமலை (57) பெயா் 7-ஆவது எதிரியாக சோ்க்கப்பட்டது.

இந்தக் கொலைக்கும் அவருக்கும் தொடா்பு கிடையாது. வேறு நபருக்குப் பதிலாக ஏழுமலையின் பெயா் தவறுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை முறையாக விசாரித்து ஏழுமலை பெயரை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT