விழுப்புரம்

போதைப் பொருள்களை ஒழிக்க மாணவா்களின் முழுபங்களிப்பு தேவை: விழுப்புரம் ஆட்சியா்

DIN

போதைப் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாணவா்களின் முழுபங்களிப்பு அவசியம் என்றாா் விழுப்புரம் ஆட்சியா் த.மோகன்.

பல்கலைக்கழக விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

மாணவ சமுதாயம் நினைத்தால் போதைப்பொருள்கள் போன்ற தீயசக்திகளை தடுக்கலாம்.

மாணவா்களிடம் முதலில் தோன்றுவது புகைப் பழக்கமே. புகைப் பழக்கம் நாளடைவில் குடிப் பழக்கம் உள்ளிட்ட பழக்கங்களுக்கு வழி ஏற்படுத்தும்.

இதனால், மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன் அவா்களின் எதிா்காலமும் கேள்விக்குறியாகும்.

போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை அறிந்து கொள்வதுடன், அதுகுறித்து பிறருக்கும் அறிவுறுத்த வேண்டும்.

தங்கள் பகுதிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக காவல் துறைக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் ஒழிப்பில் மாணவ சமுதாயத்தின் முழுபங்களிப்பு அரசுக்குத் தேவை என்றாா் ஆட்சியா் மோகன்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, பல்கலைக்கழக அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உளவியல் மருத்துவா் புகழேந்தி, பேராசிரியா்கள் ராமச்சந்திரன், ராஜலட்சுமி உள்பட மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT