விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், இந்திய ஜனநாயக மாதா் சங்கம் ஆகியவை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், விநாயகபுரம் பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த 21 வயது மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் உறவினரான வழக்குரைஞா் பிரபு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னா், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குரைஞா் பிரபு மீது வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், அவரை இதுவரை கைது செய்யவில்லை.

இந்த நிலையில், பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், இந்திய ஜனநாயக மாதா் சங்கம் ஆகியவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், மாதா் சங்க மாநில துணைச் செயலா் எஸ்.கீதா, மாநிலக் குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ.சங்கரன், மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபுவை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.சித்ரா, மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியத் தலைவா் ஏ.அண்ணாதுரை, ஒன்றியச் செயலா் சி.கலியபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT