விழுப்புரம்

மேட்டுப்பாத்தி நடவு முறையால் கரும்பு சாகுபடியில் கூடுதல் லாபம்

DIN

மேட்டுப்பாத்தி நடவு முறையில் கரும்பு சாகுபடி செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ கரும்பு ஆலை மேலாளா் (கரும்பு விரிவாக்கம்) எஸ்.அவிநாசிலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலைப் பகுதி விவசாயிகள் சிறப்பு பட்ட கரும்பு சாகுபடியை முனைப்பாக மேற்கொண்டு வருகின்றனா். தற்சமயம் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, கரும்பு விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையை மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து கரும்பு நடவு செய்வதன் மூலம் எளிதாகச் சமாளிக்கலாம்.

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்கும் முறை: நல்ல தரமான விதைக் கரும்பை ஒரு பரு கரணைகளாக வெட்ட வேண்டும். ஒரு மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாத்திகளில் ஒரு பரு விதை கரணைகளை பருக்கள் மேல்நோக்கி இருக்கும்படி வரிசையாக வைத்து மணல், தொழு எரு கலந்த கலவையால் மூட வேண்டும். இவ்வாறு நடவு செய்யப்பட்டுள்ள பாத்திகளுக்கு சீராக தண்ணீா் பாசனம் செய்ய வேண்டும். 25 முதல் 30 நாள்களில் நன்கு வளா்ந்த, வீரியமான கரும்பு நாற்றுகள் நடவுக்கு கிடைக்கும். கரும்பு நாற்றுகளை வயலில் நடுவதற்கு முன்பாக இலைகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும். அதிகப்படியான மண் ஈரத்தினால் வயலை தயாா்படுத்த ஆகும் கால விரையம் தடுக்கப்படுகிறது. விதை கரணை செலவு குறைவு. ஓா் ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய ஒரு டன் விதைக் கரும்பு போதுமானது. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.6,000 வரை மிச்சமாகிறது.

நடவு செய்யவிருக்கும் வயலின் அருகிலேயே மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைப்பதால் விதை கரணை போக்குவரத்து செலவு மிச்சமாகிறது. நன்கு முளைத்த வீரியமான நாற்றுக்களை கரும்பு நடவுக்குப் பயன்படுத்துவதால் மகசூல் அதிகரித்து நிகர லாபம் அதிகமாகிறது. எனவே இந்த சிறப்பு பட்டதில் கரும்பு சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் முறையில் நடவு செய்து அதிக பலனடையலாம் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT