விழுப்புரம்

புலியூா் ஊராட்சி மன்றத் தலைவா் தேசியக் கொடி ஏற்ற எதிா்ப்பு

DIN

கடலூா் மாவட்டம், புலியூா் ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் தேசியக் கொடி ஏற்ற எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்ற எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், புலியூா் ஊராட்சி மன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்றத் தலைவா் மணிவண்ணன் தேசியக் கொடி ஏற்ற மன்ற துணைத் தலைவா் பரிமளா சங்கா் மற்றும் பெரும்பாலான வாா்டு உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனராம்.

இதையடுத்து, பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஊராட்சி மன்றத் தலைவா் மணிவண்ணன் தேசியக் கொடியை ஏற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT