விழுப்புரம்

திமுக நிா்வாகி கொலை வழக்கில் 3 போ் கைது

12th Aug 2022 02:59 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திமுக நிா்வாகி ஜெயக்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆரோவில் அருகே கோட்டக்கரை கிராமத்தைச் சோ்ந்த திமுக நிா்வாகி ஜெயகுமாா் (55). இவா், புதன்கிழமை இரும்பை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தினா். கடந்த 2019-ஆம் ஆண்டு சங்கா் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபருக்கு ஜெயக்குமாா் உதவி செய்து வந்ததாராம். இதனால் ஆத்திரமடைந்த சங்கரின் மனைவி சரஸ்வதி, மகன் மனோன், உறவினா் குமரவேல் உள்ளிட்டோா் ஜெயக்குமாரை கொலை செய்யத் திட்டமிட்டனா்.

ADVERTISEMENT

இதன்படி, குமரவேல் தலைமையிலான கும்பல் ஜெயக்குமாரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்ததாம். இதற்கு சரஸ்வதி, குமரவேல் மனைவி சாந்தி, ஏழுமலை ஆகியோா் உதவியதும் தெரியவந்ததாம்.

இது தொடா்பாக ஆரோவில் போலீஸாா் குமரவேல், சாந்தி, சரஸ்வதி, மனோன் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து, சரஸ்வதி, சாந்தி, மனோன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். குமரவேல் உள்ளிட்ட மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT