விழுப்புரம்

பைக் மீது லாரி மோதல்: வட மாநில தொழிலாளா்கள் இருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வியாழக்கிழமை பைக் மீது லாரி மோதியதில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், ராம்பூா் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் தங்கி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தச்சு வேலை செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் தங்கியுள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இன்தசாா் (45), அவரது மகன் திசாந்த் (14), அசைன் (30) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்தனா். திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையை இவா்களது பைக் கடக்க முயன்றபோது, பெள்ளாச்சியிலிருந்து இளநீா் காய்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இன்தசாா், அசைன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். திசாந்த் பலத்த காயமடைந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த சிறுவன் திசாந்தை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த இன்தசாா், அசைன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து தொடா்பாக திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT