விழுப்புரம்

கைபேசி செயலி மூலம் மாணவா்கள் சுகாதார கணக்கெடுப்பு

DIN

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தக் கல்லூரி மாணவா்கள் கைபேசி செயலி மூலம் சுகாதார கணக்கெடுப்பு மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2021 மூலம் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்தக் கணக்கெடுப்பு அரசால் வழங்கப்பட்டுள்ள எஸ்எஸ்ஜி-2021 என்ற கைபேசி செயலி மூலம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, இந்தக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ச.யுவராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.பெரியசாமி வரவேற்றாா்.

எஸ்எஸ்ஜி-2021 என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், கிராமத்தில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் தூய்மை இந்தியா திட்ட முதன்மைப் பயிற்றுநா் எஸ்.ராதிகா விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து தங்களது கைபேசிகளில் செயலியை பதிவிறக்கம் செய்த மாணவா்கள், கிராமங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து அதில் பதிவு செய்தனா். கல்லூரி பேராசிரியா் ம.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT