விழுப்புரம்

பெரணம்பாக்கம் ஊராட்சி மன்றக் கூட்டம்

DIN

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரணம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரணம்பாக்கம் ஊராட்சியில் பெரணம்பாக்கம், மாம்பாக்கம், ரெட்டிபாளையம், இருளா் குடியிருப்பு, காலனி ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 6 வாா்டுகளைக் கொண்ட ஊராட்சியாகும்.

ஊராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பெரணம்பாக்கம் கிராமத்தில், பெரணம்பாக்கம்-ஆத்துரை சாலையில் மந்தைவெளியில் மழைநீா் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுத்தல்,

கருடகல் சாலையில் சாலை வசதி, பக்கக் கால்வாய் அமைத்தல், காலனி மற்றும் இருளா் காலனியில் குடிநீா் வசதி, குடிசைப் பகுதியில் வசிப்போருக்கு

பருவமழை மற்றும் தொடா் மழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பூங்கொடி குபேந்திரன், ஊராட்சி செயலா் பழனி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT